சனி, 19 ஜூன், 2010


கோடிக் கணக்கான சாட்சிகள்

பெருவெள்ளம் பாய்கின்ற ஆற்றில்
விட்டு எறியப்பட்ட சில கூழான்கற்களைப் போல

நமக்கென்று நமக்குள்ளே
மறைத்துக்கொள்ளும் பல ரகசியங்கள்

மண்டையோடு வுடைத்தும்
மூளையைக் கலக்கியும்
கசியாமல் கிடக்கின்றன சில உண்மைகள்

மரணங்களால் கூட எழுப்ப இயலுவதில்லை
சில உண்மைகளை

தலையையும் கால்களையும்
உள்ளிழுத்துக்கொண்ட ஆமையொன்று
மரணித்துப் போனால் எப்படியோ அப்படியாக

எப்படியோ நமக்குள் கிடக்கிற மனிதனை
பொய்களால் அழகுப்படுத்தி
பொய்களைப் பேச வைக்கிறோம்

எறியும் நட்சித்திரங்கள் யாவும்
அறிந்திருக்கின்றன

உண்மைகள் உள்ளுக்குள்
அழுது கொண்டிருக்கும் உண்மையை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக