வியாழன், 9 டிசம்பர், 2010

குறிஞ்சிப் பாட்டு - கபிலர் ......பூக்களைப் பறித்து பாறையில் குவிதல்


வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், 65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, 70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், 75
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை, 80
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், 85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, 90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், 95
அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,
மால் அங்கு உடைய மலிவனம் மருகி
வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ

குறிஞ்சிப் பாட்டு - கபிலர்

ku

செவ்வாய், 7 டிசம்பர், 2010

திங்கள், 20 செப்டம்பர், 2010



தங்கை

தங்கை இல்லாத வீடு தரித்திரம்
தங்கைகளின்
ஓயாத நடையும் பேச்சும்
ஒவ்வொரு இல்லத்தையும்
வுயிருள்ளதாக்கிக் கொண்டிருக்கிறது

அழுகைக்கு அர்த்தம் அளிக்கின்ற
சிணுங்கல்கள்
கோபத்தையும் புன்சிரிப்பையும் வரவழைக்கும்
வல்லமை படித்தவை

கனவுகளில் கூட கம்பீரமாய் வந்துபோகும்
தங்கைகள் வலிக்காமல் விமர்சனம் செய்வதில்
அதிர்ந்து போகிறார்கள்
அண்ணன்மார்கள்

வாசத்தோடு பிறக்கிற மலர்களும்
தங்கைகளோடு வளர்கிற அண்ணன்மார்களும்
தமக்கைகளும் புண்ணியம் செய்த பிறவிகளே

சனி, 19 ஜூன், 2010

இந்தியா என்னும் பல சமுதாயங்கள் வாழும் ஒரு தேசத்தில் சுரண்டுபவர்கள் மட்டுமே நாடாள்பவர்களாக எழுச்சி பெற்று
மற்றவர்களை அடகி வைத்து ஒன்றுமறியா ஏழைகளை நிர்கதியாக்கி
அதனையும் முன்னேற்றமாகவும் காட்டிக்கொள்ளும் பல தேசப்பற்றாளர்கள்
இப்பொழுது பெருகி வருகிறார்கள் .
இவர்கள் எல்லோருமே பணத்தில் பிறந்து கொழுப்பில் குளிப்பவர்கள் .
மார்க்ஸ் , லெனின் ,அம்பேத்கர் போன்ற மாபெரும் அறிவு ஜீவிகளை
ஒருபோதும் நினைவு படுத்திக்கொள்ளவோ பெருமைப் படுத்தவோ மாட்டார்கள்

ஒரு அறிவு ஜீவியும் அர்த்தமற்ற தேசமும்

இந்தியா என்னும் பல சமுதாயங்கள் வாழும் ஒரு தேசத்தில் சுரண்டுபவர்கள் மட்டுமே நாடாள்பவர்களாக எழுச்சி பெற்று
மற்றவர்களை அடகி வைத்து ஒன்றுமறியா ஏழைகளை நிர்கதியாக்கி
அதனையும் முன்னேற்றமாகவும் காட்டிக்கொள்ளும் பல தேசப்பற்றாளர்கள்
இப்பொழுது பெருகி வருகிறார்கள் .
இவர்கள் எல்லோருமே பணத்தில் பிறந்து கொழுப்பில் குளிப்பவர்கள் .
மார்க்ஸ் , லெனின் ,அம்பேத்கர் போன்ற மாபெரும் அறிவு ஜீவிகளை
ஒருபோதும் நினைவு படுத்திக்கொள்ளவோ பெருமைப் படுத்தவோ மாட்டார்கள் .

கோடிக் கணக்கான சாட்சிகள்

பெருவெள்ளம் பாய்கின்ற ஆற்றில்
விட்டு எறியப்பட்ட சில கூழான்கற்களைப் போல

நமக்கென்று நமக்குள்ளே
மறைத்துக்கொள்ளும் பல ரகசியங்கள்

மண்டையோடு வுடைத்தும்
மூளையைக் கலக்கியும்
கசியாமல் கிடக்கின்றன சில உண்மைகள்

மரணங்களால் கூட எழுப்ப இயலுவதில்லை
சில உண்மைகளை

தலையையும் கால்களையும்
உள்ளிழுத்துக்கொண்ட ஆமையொன்று
மரணித்துப் போனால் எப்படியோ அப்படியாக

எப்படியோ நமக்குள் கிடக்கிற மனிதனை
பொய்களால் அழகுப்படுத்தி
பொய்களைப் பேச வைக்கிறோம்

எறியும் நட்சித்திரங்கள் யாவும்
அறிந்திருக்கின்றன

உண்மைகள் உள்ளுக்குள்
அழுது கொண்டிருக்கும் உண்மையை

ஞாயிறு, 6 ஜூன், 2010

தமிழ்நிலம்
கானல் தகிக்கும் வளி
தீ முகில்கள் துளிர்க்கும் வெளி
இருள் துகள்கள் அடைத்திருக்க
பூமுகமோ உன் புன்னகையோ
காலமெல்லாம் தனித்திருக்கும்
எச்சொல்லும் கவியாமோ
எந்நாளும் சமர்க்களமோ
தோள்கள் வலியேற
தோல்கள் அதிரட்டும்
எம் நரம்புகள் இசைமீட்ட
எம் குருதி எரியட்டும்
எம் குருதி எரியட்டும் !!!!